பலூச் லிபரேஷன் ஃபிரண்ட் (BLF) அமைப்பு, முதல் முறையாக ஒரு பெண் தற்கொலைப்படை (fidayeen) குண்டுதாரி பயன்படுத்தி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சாகாய் பகுதியில் உள்ள சீன நிறுவனம் செயல்படுத்தும் தாமிரம் மற்றும் தங்கத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட, பலத்த பாதுகாப்புள்ள Frontier Corps முகாமை தாக்கியது. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இதில் 6 பாகிஸ்தான் பாதுகாப்பு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசு இதுவரை […]

துறைமுகப் பணிகளை நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்தல், மற்றும் துறைமுக நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவது போன்றவை தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க உதவுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கடல்சார் சட்டம் துறைமுகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனுக்கான மாற்றத்தக்க நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.துறைமுகத் தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் கிடைக்க இது வகை செய்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கு தொழிலாளர் நலன் முக்கிய உந்து […]

இந்தியாவின் பொருளாதாரம் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 8.2% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல்–ஜூன் காலாண்டின் 7.8% வளர்ச்சியை விட அதிகம். உள்நாட்டு நுகர்வு (consumer spending) அதிகரித்தது, உற்பத்தித் துறை (manufacturing) வலுவாக செயல்பட்டது ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.. உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும் இந்த 2 துறைகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றின. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொருளாதார நிபுணர்கள் […]

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காகவும் புடின் இந்தியா வருவார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு […]

அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ராமர் கோவில் உச்சியில் இன்று காவி கொடியை கொடியேற்றினார்.. இந்த கொடி 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது…. கொடி வட இந்திய நாகரா பாணியில் கட்டப்பட்ட சிகரம் மீது ஏற்றப்பட்டுள்ளது.. கொடியில் ராமரின் வீரம், அறிவுக்கூர்மையை […]

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று மீண்டும் ஒருமுறை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதட்டத்தை தானே குறைத்ததாக கூறினார்.. இரண்டு நாடுகளுக்கும் 350% வரி விதிப்பதாக மிரட்டியதால் அவர்கள் பின்னடைந்ததாக அவர் கூறினார். ட்ரம்ப் கூறியதாவது, “350% வரி மிரட்டலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் அழைத்து ‘நாங்கள் போருக்கு போகமாட்டோம்’ என்று தெரிவித்தார்.” மேல்ம் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் பதட்டத்தை தானே தீர்த்து வைத்தேன் […]

X (முன்பு Twitter) உலகளவில் பெரிய தொழில்நுட்ப கோளாறு ஒன்றை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான பயனர்கள் கண்காணிப்பு தளம் Downdetector-ல் தங்கள் புகார்களை பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சினை மிகப் பரவலாக இருந்து, x.com என்ற வலைத்தளம், Android பயன்பாடு, iOS பயன்பாடு — எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை 5:20 மணிக்குள், Downdetector தளத்தில்10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருந்தன. அதில்: 61% — மொபைல் ஆப் (அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது) […]

உலக அதிசக்திகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதற்றநிலையைத் தொடர்ந்து, உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களின் சமீபத்திய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) என்ற நிறுவனம், இந்த ஆண்டு 145 நாடுகளின் ஆயுதப்படைகளை, அவற்றின் வளங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது. இந்த தரவரிசை, பாரம்பரிய ராணுவ சக்தி வாய்ந்த நாடுகளின் இராணுவங்களை 60 விதமான அளவுகோல்கள் மூலம் ஒப்பிடுகிறது — அதில் படை வீரர்கள் எண்ணிக்கை, நிதிநிலை, […]