எல்லை விவகாரம் முதல் வர்த்தக உறவுகள் வரை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை ஒரு மூலோபாய மற்றும் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் அணுகுவதற்கும், கருத்து வேறுபாடுகளைத் தகராறுகளாக மாற அனுமதிக்கக் கூடாது என்பதற்கும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைத் தேடுவதுடன், வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் மேம்படுத்தவும் கூட்டாக முடிவு […]

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்காக 1998-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரகசிய உளவுத்துறை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா அமைப்பு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை தாக்குதலுக்கான இலக்குகளாக பரிசீலித்திருந்த தகவல் இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களின் 25-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அமெரிக்க உளவு அமைப்பான CIA பல்வேறு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. 9/11 தொடர்பான 71 உளவுத்துறை அறிக்கைகள் […]

டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகைக்காகவும் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ரஷ்யாவின் சக்திவாய்ந்த IL-76 […]

இந்தியா இந்த வாரம் தலைநகர் டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகிவிட்டது. தலைநகரில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் நடைபெறவுள்ள இந்த முக்கிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் உறுப்பு மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்களையும், மக்களை சென்றடைவதற்காக பல தலைவர்களையும் ஒன்றிணைக்கும். இந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. ‘வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டியெழுப்புதல்’ என்பதே இதன் கருப்பொருள். இரண்டு […]

இந்தியாவை கேவலப்படுத்தி, சுகாதாரமற்ற நாடாக காட்டும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அமெரிக்கப் பெண் ஒருவர் அதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய நபர் ஒருவர், தனது பெரிய தொப்பையின் மீது ரொட்டி உருட்டுவது போன்றும், நெற்றி வேர்வையை துடைப்பது போன்றும் அருவருப்பான காட்சி ஒன்று இணையத்தில் பரவியது. சுமார் 2.8 கோடி பார்வைகளை கடந்த இந்த வீடியோ, இந்தியாவில் […]

முதலாவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள இத்தொடரை மும்பை மற்றும் வதோதரா நகரங்கள் இணைந்து நடத்துகின்றன. மும்பையில் உள்ள ‘கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா’ (CCI) மற்றும் ‘வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை […]

இந்தியாவில் விமானப் பயணத்தை சாமானிய மக்களுக்கும் எளிதாக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ‘உடான்’ (UDAN) திட்டத்தின் கீழ் இந்தப் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் […]

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இமயமலைப் பகுதியில் நிலவும் மற்றொரு தீவிர இயற்கை ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலைச்சரிவுகளில் உறுதியற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் திடீரென உடைந்து விழுந்தால், மிகப்பெரிய பனிச்சரிவு உருவாகி அதன் தொடர்ச்சியாக வெள்ளம், சேற்றுப் பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுகள் ஏற்படலாம். இந்தியாவிலும் இதுபோன்ற ஆபத்தான பனிப்பாறைகள் இருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. ‘Hanging Glacier’ என்றால் என்ன? பொதுவாக […]

இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது டெஸ்ட் போட்டியை இலங்கை காலிமைதானத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தினமான (ஆகஸ்ட் 15) இன்று தொடங்குகிறது. இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 600 டெஸ்ட் போட்டிகளை எட்டிய 3-வது நாடு என்ற மகத்தான சாதனையை இந்தியா பெறுகிறது. அடிமைப்பட்ட இந்தியாவில் 1932-ல் தொடங்கி இன்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக உயர்ந்துள்ள இந்திய டெஸ்ட் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்வோம். […]

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]