மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று மதியம் 12 மணிக்கு புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளார். மேலும், ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் […]
PM Modi
பிஎம் மித்ரா பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இவை அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் விருதுநகர், தெலங்கானாவில் வாராங்கல், குஜராத்தில் நவ்சாரி என்ற பகுதியிலும், கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியிலும், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ […]
நாட்டில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்களை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருந்து பொருட்களின் தயார்நிலை, தடுப்பூசி பிரச்சாரத்தின் நிலை, புதிய கொரோனா வகைகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வகைகள் மற்றும் அவை ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். மத்திய சுகாதார செயலாளர், கோவிட்-19 […]
தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் பிஎம் மித்ரா (PM MITRA) பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காவின் மூலமாக […]
அமைதிக்கான நோபல் பரிசுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய போட்டியாளர் என்று நோபல் பரிசுக் குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். நோபல் பரிசு குழு என்பது, நோபல் பரிசு வெற்றியாளர்களை தீர்மானிக்கும் குழுவாகும். இந்த குழு இந்தியா வந்துள்ள நிலையில், அக்குழுவின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், உலகின் அமைதியின் மிகவும் நம்பகமான தலைவர்களில் பிரதமர் மோடியும் […]
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் போட்டித் திட்டத்திற்கு புதிய இணையதளம். இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று அவர் கூறியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சாம்பியன் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைப் போட்டித் திட்டம் (LEAN) தொடங்கப்பட்டது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் […]
இந்தியாவின் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய ராஜ்நாத் சிங் “ இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்துள்ளார். அவரது அறிக்கையை இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும்.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.. அப்போது மோடி ஆட்சியின் கீழ் இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் உரையாற்றிய மோடி, ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.. சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின் போது, ராகுல் காந்தி கூறிய கருத்துகள் குறித்து இந்தியாவின் பாரம்பரியத்தையும் அதன் குடிமக்களையும் […]
இந்திபோர் தூரி உடல்நிலை குறைவு காரணமாக கவுகாத்தியில் காலமானார். அசாமின் புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிஞருமான இந்திபோர் தூரி உடல்நிலை குறைவு காரணமாக கவுகாத்தியில் காலமானார். அவருக்கு வயது 77.கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ஜுக்தி பிகாஷ், ஜுக்திர் போஹோரோட் சமாஜ், மற்றும் ஜோதி-பிஷ்ணு என்ற மூன்று புத்தகங்களையும் ஆசிரியர் பிரசென்ஜித் சவுத்ரியுடன் இணைந்து தொகுத்துள்ளார். இந்திபோர் தூரியின் […]
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. […]