தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ணசாமி மாநாட்டு பிரச்சாரம் […]

6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் […]