அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) என்ற வகை ரேஷன் கார்டுகளைப் பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை (Biometric Authentication) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 25, 2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்பட்டு வரும் AAY திட்டத்தின் கீழ் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் […]

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைக் விபத்துக்களில் 16,712 பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் பைக் என்பது வசதிக்குரிய போக்குவரத்து உபகரணமாக மட்டுமல்ல, ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், இந்த பைக்குகள் பாதுகாப்பற்ற பயணமாகவும் மாறியுள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். மது போதையில் வாகனத்தை ஓட்டுவது, […]

தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமாரிப்புத்துறை தெரிவித்துள்ளது.. தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராக வருவதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுவது போல, தினசரி அடிப்படையில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி, கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்யவும் […]

அண்மை காலமாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் இந்த போக்கினை அதிகமாக காண முடிகிறது. தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11% அளவிற்கு சரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவாக 2024 ஆம் ஆண்டில் 8.50 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி […]

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் கொரோனா பாதித்த 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி […]

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வை தீவிரமாக ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-ல் தனது அரசியல் கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டி மாநாடு, சென்னையில் பொதுக்குழு, கோவையில் பூத் மாநாடு என தொடர்ச்சியான செயல்பாடுகளால் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற விஜய், தற்போது மாவட்ட மட்ட கட்டமைப்புகளையும் வலுப்படுத்தி வருகிறார். எனினும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், முழு நேர அரசியலில் முழுமையாக இறங்காமல் […]