தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதே போல அதிமுகவும் தங்களது கட்சியை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த மாதம் அதிமுகவில் இருந்து மூன்று புள்ளிகளை தூக்கி சம்பவம் செய்திருக்கிறது திமுக. அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதனை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான், முன்னாள் எம்பி மைத்திரேயன் உள்ளிட்டோர் திமுக கட்சியில் இணைந்தனர்.
தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் 5000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாபெரும் விழாவை நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
Read more: உஷார்!. தவறுதலாக கூட இப்படி முட்டைகளை சமைக்காதீர்கள்!. புற்றுநோய் வரும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!