விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ளது துறிஞ்சிப்பூண்டியை சேர்ந்த்வர் விவசாயி பழனிவேலு. இவருக்கு வெறுத்தாம்பாள் (55), ஜெயக்கொடி (45) என்ற 2 மனைவிகள் உள்ளனர்.. மூத்த மனைவி வெறுத்தாம்பாளுக்கு பாலகுரு (28), பிரகாஷ் ராஜ் (25) என்ற 2 மகன்களும், ஜெயக்கொடிக்கு பூபாலன்(19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
முதல் மனைவி வெறுத்தம்மாள் கனவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவரின் இரண்டு மகன்களும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இரண்டாவது மனைவி ஜெயக்கொடியுடன் துறிஞ்சிப்பூண்டியில் பழனிவேல் வசித்து வருகிறார்.. இவர்களது மகன் பூபாலன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்..
இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனிவேல், 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பிள்ளைகள் வெளியூரில் கல்லூரியில் படித்து வருவதால், ஜெயக்கொடி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.. இந்நிலையில், நேற்று காலையில் ஜெயக்கொடி வீட்டின் எதிரிலுள்ள கிணற்றில் ரத்தக்கறை படிந்துள்ளதை பார்த்து அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீசார், கிணற்றில் இறங்கி தேடியபோது, ஜெயக்கொடியின் சடலத்தை கண்டெடுத்தனர். ஜெயக்கொடியின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.. அவரது தலை சிதைந்த நிலையில் கிடந்தது. உடலில் கல் கட்டப்பட்டிருந்தது. சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் முதல் மனைவி குடும்பத்தினருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய கெடுக்குப்புடி விசாரணையில், சித்தி ஜெயக்கொடியை கொலை செய்ததை பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார்.
தகவலின்படி, அப்பா பழனிவேல் பெயரிலிருந்த நிலத்தை பிரகாஷ்ராஜ் பங்கு பிரித்து கேட்டுள்ளார். இதற்கு ஜெயக்கொடி மறுத்த ஆத்திரத்தில்தான், ஜெயக்கொடியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு அவரை கொன்றுள்ளார். ஜெயக்கொடியின் கை, கால்களை கட்டி பெரிய கல்லுடன் உடலையும் சேர்த்துக்கட்டி எதிரே உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளார். இதையடுத்து பிரகாஷ்ராஜை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



