அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரமா?.. தவெகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

ADMK Chief secretary Edappadi Palanisamy 2 1

அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களை தவெக தரப்பினர் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கு மக்கள் தான் சரியான பதிலை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து நியாயம் கேட்பது போல் தனது எக்ஸ் பதிவில் அவர் கருத்துகளை பதிவு செய்துள்ளார்.


கட்சியின் வெற்றிக்காக பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளையும், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களையும் கடந்து எம்எல்ஏக்களை மட்டும் அரசியல் ரீதியாக அணுகுவது எந்த வகையில் நியாயம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் 6,000 நிர்வாகிகளின் உழைப்பையும், அவர்களை நம்பிய வாக்காளர்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் தொடர்பான விவகாரத்தில் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருந்த நிலையில், தற்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை விமர்சிக்கும் அளவுக்கு அரசியல் சூழல் மாறியிருப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவின் அடையாளமாக இருக்கும் இரட்டை இலை சின்னத்தையும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தையும் பாதுகாப்பது தனது அரசியல் பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த முயற்சிக்கும் எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் வாரிசாகவோ, சினிமா பின்னணி கொண்டவராகவோ பார்க்க வேண்டாம் என்றும், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒருவராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். மக்களின் அன்றாட பிரச்சினைகளை நேரடியாக புரிந்து கொண்டு அரசியலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சுற்றி பல்வேறு அரசியல் சவால்கள் உருவாகியுள்ள நிலையில், தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்சியை பாதுகாக்க ஒன்றிணைந்து நிற்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவு மக்களுடையது என கூறியுள்ள அவர், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான பாடமாக அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: துவரம்பருப்பு கொள்முதலில் அதிரடி மாற்றம்.. 3 மாதத்தில் அரசுக்கு ரூ.187 கோடி மிச்சம்!

Saranya

Next Post

ஆன்மிக பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.1,350-க்கு 14 திவ்ய தேசங்கள் சுற்றிப் பார்க்கலாம்!

Mon Oct 5 , 2026
பல கோயில்களை ஒரே பயணத்தில் தரிசிக்க வேண்டும் என்ற பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஆன்மிக சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் டெல்டா பகுதியில் உள்ள 14 முக்கிய வைணவ திவ்ய தேசங்களுக்கு ஒரே நாளில் சென்று வர முடியும். வார இறுதி நாட்களில் மட்டும் இயக்கப்படும் இந்தப் பயணத்துக்காக 53 இருக்கைகள் கொண்ட ஏசி சொகுசுப் பேருந்து பயன்படுத்தப்படுகிறது. […]
6628cd6acffb3fb5bdcef9bd9845c36e7fb08f0e5a57c3249f43d435a4603346

You May Like