உத்திரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவரது மனைவி குஷ்ணுமா. இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆன நிலையில் 4 குழந்தைகள் உள்ளனர். 4 வது குழந்தை பிறந்து ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. இதனிடையே அந்த பெண்ணுக்கு வேறொரு இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் கணவன் சல்மானுக்கு தெரிய வரவே இருவருக்கும் இடையே தகறாரு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தனது கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கணவன் மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் மனைவி இனி தன்னால் இந்த வீட்டில் வாழ முடியாது என்று கூறி தனது கள்ளக்காதலன் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலி இருந்த கணவர் சல்மான் தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு யமுனை நதி மீது உள்ள பாலத்தின் மீது ஏறி அங்கிருந்து ஆற்றில் குதித்து விட்டார். பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை அவருடைய சகோதரிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில், தன் முடிவுக்கு மனைவியும் அவரது கள்ளக்காதலனும் மட்டுமே காரணம் என்று சல்மான் கூறியுள்ளார். வீடியோவை பார்த்த சசோதரி அதிர்ச்சி அடைந்து தனது சகோதரனுக்கு போன் செய்துள்ளார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மீட்பு படையினர் உதவியுடன் போலீசார் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read more: வாஸ்துப்படி மொபைலில் கடவுள் புகைப்படத்தை வால்பேப்பராக வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..?