ஜாலி…! இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! ஆனால் ஒரு டுவிஸ்ட்…!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றிரவே புறப்பட்டு வருவது என்பது மிகுந்த சிரமமாக இருக்கும்.

குறிப்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் நிலையில் உடனடியாக திரும்பி வருவதில் சிக்கல் உருவாகும். இதை கருத்தில் கொண்டு, நவம்பர் 13-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன. அனைவரது கோரிக்கைகளை ஏற்று இன்று தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இவ்வாண்டு தீபாவளியை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

Vignesh

Next Post

ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்...! TNPSC முக்கிய அறிவிப்பு...!

Mon Nov 13 , 2023
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நவம்பர் 19-ம் தேதி எழுத்து தோ்வு நடைபெறவுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுனர், நடத்துனர்கள் தோ்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில், வரும் நவம்பர் 19-ம் தேதி எழுத்துத் […]

You May Like