நடை பயிற்சியின் போது, வேகமாக ஓடலாமா……?

நடைபயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகும். ஆனால், அன்றாடம் உடலை வருத்தி பணிகளை செய்யும் நபர்களுக்கு இந்த நடைபயிற்சி தேவைப்படாது. அதேநேரம், ஒரே இடத்தில் இருந்து, பணிகளை மேற்கொள்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நடைபயிற்சி மிகவும் அவசியமாகும்.

இந்த நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலமாக, உடலில் உள்ள பல்வேறு கலோரிகள் குறைகிறது. ஆகவே, உடல் எடை வெகுவாக குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், நடைபயிற்சியின் போது, மெதுவாக நடந்து செல்வதை விட, கொஞ்சம், கொஞ்சமாக வேகத்தை அதிகரிப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. அதோடு, மிகவும், நிதானமாக, நடப்பதை விடவும், சற்று வேகமாக நடந்தால், அதிகளவிலான கலோரிகள் உடலில் இருந்து நீக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

பலர் நடை பயிற்சியின்போது, ஒரே சமதளமான பாதையில், நடந்து செல்வார்கள். அப்படி நடப்பதை விடவும், சற்று உயரமான ஏற்ற, இறக்கத்துடனான பகுதிகளில், நடைப்பயிற்சி மேற்கொள்வது கூடுதலான கலோரிகளை உடலில் இருந்து நீக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல, நாள்தோறும், 10,000 அடி நடை பயிற்சி மேற்கொள்வது உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. நடை பயிற்சியை சாதாரணமாக, உடற்பயிற்சியாக நினைக்காமல், நன்றாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதும், நடையின் வேகத்தை அதிகரிக்கலாம், அதேநேரம், வேகமாக ஓட கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Next Post

குறை பிரசவம் மற்றும் எடை குறைவு… சாதித்து காட்டிய நாகை அரசு மருத்துவர்கள்..!

Tue Aug 8 , 2023
நாகை மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர் கொராடச்சேரி பகுதியை சேர்ந்த முருகதாஸ் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை.இந்த கஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகினர். எந்த பலனும் அளிக்காத நிலையில் தனது தாயின் வீட்டிற்கு சென்று, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். அங்கு சரண்யா கருவுற்று தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனையில் […]

You May Like