“AI மூலம் யுபிஎஸ்சி கேள்வித் தாள்” – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை AI பயன்படுத்தி, மாநில மொழிகளில் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மாநில மொழியில் எழுத உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதிகப்பட்டுள்ளது. ஆனால், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுவதால், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும்எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம். அப்படி மொழியாக்கம் செய்தி மாநில மொழிகளில் கேள்வித் தாள்களை தயாரிக்கலாம். இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருக்கிறது. அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம். இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Next Post

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை ; உரிமையாளர் கைது!

Tue Apr 23 , 2024
டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டலில் ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது.அதன்பிறகு அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதனையடுத்து கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் […]

You May Like