மகாராஷ்டிராவில் கணவர் காணாமல் போனதாக கூறி நாடகமாடிய மனைவி, தனது காதலனுடன் இணைந்து அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவர் திடீரென காணாமல் போனதை அடுத்து, அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையே, கணவரை காணவில்லை என மனைவியும் வெளியில் கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில், அப்பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை கவனித்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கணவரின் மரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கினர். விசாரணையின்போது மனைவியின் பதில்களில் முரண்பாடுகள் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவரை கொலை செய்த சம்பவத்தில் தனது காதலனுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கணவரை கொலை செய்ததற்கான காரணம், கொலை நடந்த விதம் மற்றும் உடலை கிணற்றில் வீசியது தொடர்பான முழுமையான விவரங்களை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: எம்எல்ஏக்களுக்கு கார்.. “இன்னோவா கொடுத்தா நல்லா இருக்கும்!” எம்எல்ஏ வைத்த ‘டிமாண்ட்’!



