பெண்களே… இனி யாரிடமும் கைநீட்ட வேண்டாம்… இந்த தொழிலை மட்டும் தொடங்குங்க… மாதம் ₹50,000 வரை சம்பாதிக்கலாம்!

women empowerment 1 1

இன்றும் பல பெண்கள், சிறிய செலவுகளுக்குக் கூட பிறரின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு, குடும்ப சூழல் அல்லது வெளியே சென்று வேலை செய்ய முடியாத காரணங்களால், பலரின் திறமைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றன. ஆனால், வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் தொடங்கி, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாய்ப்புதான் காளான் (Mushroom) வளர்ப்பு தொழில்.


சமீப காலமாக ஆரோக்கியமான உணவுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால், காளானின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனை மூலம் காளானை எளிதாக சந்தைப்படுத்தலாம். இந்த தொழிலை வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையிலேயே தொடங்க முடியும். ஆரம்பத்தில் காளான் விதைகள், வளர்ப்பு பைகள், வைக்கோல், தண்ணீர் தெளிக்கும் கருவி உள்ளிட்ட பொருட்களை வாங்க சுமார் ₹8,000 முதல் ₹15,000 வரை முதலீடு செய்தாலே போதுமானது.

ஒரு வளர்ப்பு சுற்று பொதுவாக 25 முதல் 30 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சரியான பராமரிப்பு மற்றும் தொடர்ந்து விற்பனை கிடைத்தால், மாதத்திற்கு ₹20,000 முதல் ₹50,000 வரை லாபம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், புதிய காளான் மட்டுமல்லாமல், உலர் காளான், காளான் பொடி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் வருமானத்தை மேலும் அதிகரிக்க முடியும். வீட்டிலிருந்தே தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு, குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாக இது பார்க்கப்படுகிறது.

Also Read: பெரிய முதலீடு தேவையில்லை… பெண்களுக்கு ஏற்ற சிறு தொழில்!

Saranya

Next Post

மீன் பிரியர்களே உஷார்..!! நல்லதுன்னு நினைச்சு ஆபத்தில் சிக்கிடாதீங்க..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Fri Jul 31 , 2026
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடலுக்கு தேவையான ‘ஒமேகா-3’ கொழுப்பு அமிலங்களைப் பெறவும் உணவில் மீன் சேர்த்துக்கொள்வதை மருத்துவர்கள் பரவலாகப் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவுகள் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரித்து இதயச் செயல்பாட்டை மேம்படுத்தினாலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சந்தையில் கிடைக்கும் அனைத்து வகை மீன்களையும் சுவைக்க முடியாது என்பது பலரும் அறியாத உண்மையாகும். தவறான முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களையோ அல்லது குறிப்பிட்ட வகை கடல் உணவுகளையோ உட்கொள்ளும்போது, […]
Fish 2025

You May Like