“நா உன்ன மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் பேபி…” பாசமாகப் பேசிய வாலிபர்; நம்பிச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

WhatsApp Image 2026 07 07 at 1.03.58 PM

சென்னை கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்தவர் 25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, வேளச்சேரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 25 வயதான தமிழரசன் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.


இந்த நிலையில், “நான் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன். உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு முக்கியமில்லை” என்று கூறி, தமிழரசன் பிரியாவை ஏமாற்றி வந்துள்ளார். அவரது பேச்சை நம்பிய பிரியா, அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், தமிழரசன் பிரியாவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில், பிரியா தன்னை திருமணம் செய்யுமாறு தமிழரசனிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழரசன் அதற்க்கு மறுத்ததுடன், பிரியாவை கடுமையாக தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, இது குறித்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போன்ற நகரங்களில், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றி, பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் அண்மைக் காலமாக பல்வேறு இடங்களில் பதிவாகி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: வழுக்கை தலையிலயும் முடி வளரணுமா? இந்த ஒரு விஷயம் மட்டும் பண்ணுங்க!

Saranya

Next Post

அதிர்ச்சி!! பெற்ற பிள்ளைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சிய தந்தை; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Sat Jul 11 , 2026
சமீப காலமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் குறிப்பாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் 45 வயதான மரிய மைக்கேல். லாரி டிரைவரான […]
WhatsApp Image 2026 07 11 at 10.31.05 AM

You May Like