கோவையில் இளைஞரிடம் நூதன முறையில் 7.13 லட்சம் மோசடி! சைபர் கிரைம் போலிசார் விசாரணை!

வெகு காலமாகவே தொலைபேசியின் மூலமாக வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்று அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து விட்ட நிலையில் இன்னமும் கூட இது போன்ற தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற்றமடையும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..!

கோயமுத்தூர் வெள்ளலூர் எல்.ஜி நகர் 3வது பிரிவை சேர்ந்தவர் நிஷாந்த்(30). இவர் நேற்று முன்தினம் கோவை மாநகர காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார்.

அந்த புகார் மனுவில் பகுதி நேர வேலை தேடிவந்த நான் என்னுடைய whatsapp லிங்கில் எனக்கு வந்த லிங்கில் இ.பே இணையதள பக்கத்திற்கு சென்று பார்த்தேன், அதில் பணத்தை முதலீடு செய்தால் லாபமடையலாம் என்று கூறப்பட்டிருந்தது.

’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

ஆகவே நான் இதனை நம்பி அதில் தெரிவிக்கப்பட்டிருந்த வங்கி கணக்கு எண்ணுக்கு பல தவணைகளில் ஒட்டுமொத்தமாக 7,13,724 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் அதில் தெரிவித்தபடி எனக்கு லாபத்தொகை எதுவும் வரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்மநபர் மீது மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!!! 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்...

Wed Dec 7 , 2022
3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்றுள்ளது. 3 ஒருநாள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-பங்களாதேஷ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய […]
ind vs ban odi

You May Like