fbpx

நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…? மத்திய சுகாதாரத்துறை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,664 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 35 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,555 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,34,188 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,57,929 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,337 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,16,56,54,766 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,84,216 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அரசியலில் இருந்து முழுமையாக விலகினார் நடிகர் நெப்போலியன்..! என்ன காரணம்?

Sun Sep 18 , 2022
தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால், அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து […]
அரசியலில் இருந்து முழுமையாக விலகினார் நடிகர் நெப்போலியன்..! என்ன காரணம்?

You May Like