டெல்லியில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது.
அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில், 4½ வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
அதாவது, குற்றம் சுமத்தப்பட்ட நபரின் தண்டனையை உறுதி செய்த சமயத்தில், நீதிபதி அமித் பன்சால் இந்த கருத்தை கூறியுள்ளார். அந்த சிறுமியின் அண்டை வீட்டுக்காரர் தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், ஒரு அதிரடி கருத்தையும் கூறியுள்ளது.
அதாவது, இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இல்லாத ஒரே காரணத்திற்காக பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என்று கருத இயலாது என்று கூறியிருக்கிறது.
அதோடு, இந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, குற்றம் சுமத்தப்பட்டவரின் தண்டனையிலிருந்து அவரை விடுவித்து விட முடியாது என்று கூறியுள்ளார் நீதிபதி.