தனிப்பட்ட முறையில் உங்கள விமர்சனம் செஞ்சா அத்தனை வண்டவாளம் வெளியே வரும்…! பாஜக பதிலடி

narayan tirupathi annamalai 2025

அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரிவு மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா…? உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை வண்டவாளங்களும் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று உங்களுக்கு தெரியாதது வியப்பளிக்கிறது.

அண்ணாமலையால் திமுகவினர் தூக்கமின்றி தவித்ததும், தவித்துக் கொண்டிருப்பதும் உலகறிந்த உண்மை. பாஜகவில் குடும்ப அரசியலோ, வாரிசு அரசியலோ இல்லை என்பது கூட தெரியாத ஓர் அமைச்சர் இப்படி விமர்சித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. திமுகவில் சொல்லப்படும் பதவி, பாஜகவில் பொறுப்பு, அது மாறிக் கொண்டேயிருக்கும் என்பதை அறியுங்கள். அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும். அப்போது நீங்கள் காலாவதி ஆகியிருப்பீர்கள் என்பதை உணருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நாளை பிறக்கிறது புரட்டாசி!. பெருமாளுக்கு மாவிளக்கு போடுபவரா நீங்கள்?. இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!.

Tue Sep 16 , 2025
பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]
puratasi perumal

You May Like