21-ம் தேதி பள்ளி, கல்லூரி & பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை…! தமிழக அரசு அறிவிப்பு..!

Tn Govt 2025

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால், சென்னை, திருச்சி, ஓசூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. திங்கள் கிழமை தீபாவளி முடித்துவிட்டு, மீண்டும் செவ்வாய்கிழமை திரும்பும் சூழல் இருப்பதால், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி அடுத்த நாள் அக்டோபர் 21 ஆம் தேதியும் பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!. 8 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 15 பேர் பலி!.

Sat Oct 18 , 2025
போர் நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் இன்று இரவு ஆப்கானிஸ்தானுக்குள் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, பெண்கள், குழந்தைகள் மற்றும் 8 கிளப் அளவிலான கிரிக்கெட் வீரர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே போர் போன்ற சூழல் உருவாகி வருகிறது. பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தான் மண்ணில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை வானத்திலிருந்து கிரிக்கெட் வீரர்கள் மீது குண்டுவீசித் […]
8 cricketers killed

You May Like