திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி பிரியா (வயது 26). இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீப நாட்களாக பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அடிக்கடி கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டுள்ளது. சண்டை ஏற்படும் போதெல்லாம் பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார். பின்னர் சமாதானம் அடைந்ததும் மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்று விடுவார். இந்த நிலையில், பிரியாவை அவரது பெற்றோரால் கடந்த இரு மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் தந்தை சீனிவாசன் மகளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் பிரியா இல்லை. மருமகன் சிலம்பரசனிடம் கேட்டபோது, பிரியா வெளியில் சென்று விட்டதாக கூறியிருக்கிறார். இதற்கிடையே பேரன்கள் இருவரும் அம்மாவை இரண்டு மாதங்களாக காணவில்லை தாத்தா என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு மனைவி பிரியாவுடன் சிலம்பரசனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கழுத்தை நெரித்ததில் உயிரிழந்துவிட்டார். இதனால் உடலை யாருக்கும் தெரியாமல் டிரம்மில் அடைத்து வைத்து, மோட்டார் சைக்கிளில் வெளியே கொண்டு சென்று 3 கிமீ தூரம் உள்ள ஏழு கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டின் அருகே புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Read more: கற்பூரம் எப்படி இவ்வளவு வேகமாக எரிகிறது?. அதில் என்னவெல்லாம் கலக்கப்படுகிறது தெரியுமா?



