“அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது..” இபிஎஸ் காட்டம்..!

MK Stalin eps

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்..


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.

சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில், இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர்
மா.சுப்பிரமணியன் அவர்களின் அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.

ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே
இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்..’ என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : தமிழகத்தில் மட்டும் இந்த இழிநிலை .. குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்..? ஸ்டாலின் அரசை சாடிய அண்ணாமலை..!

RUPA

Next Post

கடினமான காலங்களில் இந்தியச் சந்தைகளைத் தாங்கிப் பிடித்தது இதுதான்.. பொருளாதார ஆய்வறிக்கை பகுப்பாய்வு..!

Thu Jan 29 , 2026
உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு ஆதரவுடன் இந்தியச் சந்தைகள் நிலையாக நீடித்துள்ளன என்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியப் பங்குச் சந்தை இதுவரை நிலையாக இருந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. அறிக்கையின்படி, சவாலான காலகட்டத்தில் கொள்கை ஆதரவு, மேம்பட்ட பேரியல் பொருளாதார நிலைமைகள் […]
nirmala sitharaman 1 1

You May Like