அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது…
ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு
ஈரான் மக்களை நேரடியாகக் குறிவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.. அப்போது “ஈரானின் மகத்தான, பெருமைமிக்க மக்களே, இன்று உங்கள் சுதந்திரத்தின் நேரம் வந்துவிட்டது. நாம் பணியை முடித்த பிறகு, உங்கள் அரசாங்கத்தை நீங்கள் கைப்பற்றுங்கள். அது உங்கள் உரிமை. இது பல தலைமுறைகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இருக்கலாம்,” என்று கூறினார்.
மேலும், ஈரான் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினரையும் அவர் நோக்கி,
“உங்கள் ஆயுதங்களை கீழே வையுங்கள். அப்படி செய்தால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். மீறினால் உறுதியான மரணம் ஏற்படும்,” என்று கடும் எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்த வரலாற்றுத் தருணத்தில், ஈரான் மக்களுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு வழங்குகிறது என்றும், இதுபோன்ற நடவடிக்கையை எந்த முந்தைய அமெரிக்க அதிபரும் எடுக்கவில்லை என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர், ஈரான் பதிலடியாக ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாது.. இதையடுத்து நாடு முழுவதும் இஸ்ரேல் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. இஸ்ரேலின் திடீர் தாக்குதலுக்கு “கடுமையான பதிலடி” அளிக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளதால், மத்திய கிழக்கு பகுதியில் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஏவுகணை தாக்குதல் ஏற்படக்கூடும் என்பதால், அதற்குத் தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை
தொடர்ந்து நீடிக்கும் இந்த மோதல் காரணமாக, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. “ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்,” என்று தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் நிலைமை தீவிரமாக இருப்பதால், இந்தியர்கள் தங்களது பாதுகாப்பை முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : எச்சரிக்கை உடன் இருங்க.. வெளியே வர வேண்டாம்.. ஈரான், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..!



