கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.. ஆட்சியை பிடிக்க போவது யார்..? உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்..!

stalin ips vijay

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. சமீபத்​தில் வெளி​யான தேர்தலுக்கு பிந்​தைய கருத்து கணிப்​பு​களில் பெரும்​பாலானவை திமுக கூட்​டணி வெற்றி பெற்று மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று தெரி​வித்​துள்​ளன. இதனால் திமுகவினர் மிகுந்த உற்​சாக​மாக காணப்​படு​கின்​றனர்.


திமுக அதிமுகவை விட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை பிடிக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது. சட்டமன்றத் தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பலத்த போட்டி நிலவுவதால் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை கணிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது.

இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை (மே 4, 2026) முன்னிட்டு, அண்ணா அறிவாலையம் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட சிறப்பு கவுண்ட்-டவுன் திரை கவனம் ஈர்த்துள்ளது. இந்த திரையில், தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முக்கிய நேரமான மதியம் 12 மணியை நோக்கி நேரக் கடிகாரம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த ‘கவுண்ட்-டவுன்’ வசதி மூலம், முடிவுகள் வெளியாக இன்னும் எத்தனை மணி நேரங்கள், நிமிடங்கள் மற்றும் நொடிகள் மீதமுள்ளன என்பதைக் கண்காணிக்க முடிகிறது. தேர்தல் களத்தில் நிலவும் பரபரப்பை பிரதிபலிக்கும் இந்த நேரக் கணிப்பு, அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

Read more: Vastu Tips | இந்த நாட்களில் துடைப்பம் வாங்கினால் செல்வத்தை துடைத்துவிடும்..! இதுதெரியாம வாங்காதீங்க..

English Summary

Countdown starts.. Who will take power..? Tamil Nadu is in a state of heightened excitement..!

You May Like