நமது தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமான உணவாக கருதப்படுவது காலை உணவுதான். இரவு முழுவதும் நீண்ட நேரம் உணவு இல்லாமல் இருந்த பிறகு, காலை உணவு தான் உடலுக்கு முதல் எரிசக்தியை வழங்குகிறது. அதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் “Breakfast is the most important meal of the day” என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் உணவை சாப்பிடுவது மட்டுமே போதாது; எந்த உணவை சாப்பிடுகிறோம் என்பதே உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பலர் அறியாமல் காலை நேரத்தில் சில தவறான உணவுகளை எடுத்துக்கொள்வதால், நாள் முழுவதும் சோர்வு, செரிமான பிரச்சனை, மன அழுத்தம் போன்றவை உருவாகின்றன. அதனால் காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகளை விரிவாகப் பார்ப்போம்.
தேநீர் காபி: முதலில், தேநீர் மற்றும் காபி. காலையில் எழுந்தவுடன் பலருக்கும் டீ அல்லது காபி குடிப்பது ஒரு பழக்கமாகிவிட்டது. ஆனால் வெறும் வயிற்றில் இவற்றை அருந்துவது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இரைப்பை அழற்சி, அமிலத்தன்மை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், காபி உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கும். இதனால் காலை முதலே மன அழுத்தம், பதட்டம் போன்றவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குளிர்பானங்கள்: அடுத்ததாக குளிர்பானங்கள். சிலர் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்து காலையில் ஜூஸ் குடிக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சேர்வைகள் உடல் ஆற்றலை குறைத்து, உடனடி சோர்வை ஏற்படுத்தும். உடலில் குளுக்கோஸ் ஸ்பைக் ஏற்பட்டு, பின்னர் அது திடீரென குறைவதால் பலவீனம் அதிகரிக்கும்.
பொறித்த உணவுகள்: காரமான மற்றும் பொரித்த உணவுகள் காலை நேரத்தில் மிகப்பெரிய தவறு. இவை வயிற்றின் உள்ளமைப்பை எரிச்சலடையச் செய்து, நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை தூண்டும். குறிப்பாக வெறும் வயிற்றில் இவை எடுத்தால், நாள் முழுவதும் செரிமான கோளாறு நீடிக்கும்.
தயிர்: தயிர் ஒரு ஆரோக்கியமான உணவு. ஆனால் அதை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் நமது பற்கள், எலும்புகள் மற்றும் முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆனாலும், அதை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில், வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும். அது அமிலத்தன்மை பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள்: எந்தச் சூழ்நிலையிலும் காலையில் எலுமிச்சை, திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அவற்றில் சிட்ரிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. அவற்றை இரவில் சாப்பிடுவது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
சர்க்கரை உணவுகள்: எந்தச் சூழ்நிலையிலும் காலையில் சாப்பிடக் கூடாத உணவுகளில் இனிப்புப் பண்டங்களும் ஒன்றாகும். சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுகள் சுவையாக இருந்தாலும், அவற்றை காலையில் சாப்பிட்டால் நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள். நீங்கள் மந்தமாக இருப்பீர்கள். மேலும், இது உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும். அத்துடன், நாள் முழுவதும் உங்களுக்கு மிகுந்த பசியும் எடுக்கும்.
பச்சைக் காய்கறிகள்: பலர் ஆரோக்கியமாக இருப்பதற்காக காலையில் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுகிறார்கள். ஆனால், இவை நமது செரிமான அமைப்பில் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதாவது, பச்சைக் காய்கறிகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.



