தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அரசியல் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கி, சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். மேலும், அவரது கட்சியான தவெக மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘Axis My India’ உள்ளிட்ட சில எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில் விஜய் தனித்து ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டதால், தவெக ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னாள் டிஜிபி ரவியும் விஜய் 121 இடங்கள் வரை வெல்லலாம் என கணித்துள்ளார்.
இவ்வாறான சூழலில், நடிகை திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் காரில் பயணிப்பதும், முன்புறத்தில் “திருப்பதி” எனும் பலகை காணப்படுவதும், அவர் திருப்பதி நோக்கி பயணம் மேற்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் பலமுறை இணைந்து நடித்த விஜய் மற்றும் திரிஷாவுக்கு இடையே நெருக்கமான நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே.
இதனால், விஜயின் தேர்தல் வெற்றிக்காகவே திரிஷா திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து திரிஷா அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதே நேரத்தில், இன்று திரிஷாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யச் சென்றிருக்கலாம் என்பதும் மறுக்க முடியாத விஷயமாக பார்க்கப்படுகிறது.
Read more: காலையில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க.. வயிற்றை மோசமாக்கிடும்..!



