Flash: ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநர்.. உச்சநீதிமன்றத்தை உடனடியாக நாடும் தவெக..!

tvk supreme court

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.


விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால், தவெகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 107 ஆக குறையும். இதனால், குறைந்தது மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகிறது. தற்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள்ளது.. மேலும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதவுக்கு விஜய்க்கு தேவை..

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்றாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களின் முழு ஆதரவு இன்னும் உறுதி செய்யப்படாததால், ஆளுநர் தரப்பில் பதவிப்பிரமாண அழைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இப்படியான சூழலில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தரப்பு, சட்டவிதிகளின்படி அதிக இடங்களை பெற்ற கட்சிக்கு முதலில் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக முதல்வரை பதவிப்பிரமாணம் செய்து வைத்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு வாதாட தவெக சட்ட அணிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீர்ப்பில், ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பெரும்பான்மை நிரூபிப்பு நடைமுறை குறித்து முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more: “இரவு 1 மணிக்கும் வேலை செய்வார்கள்!” இந்திய ஊழியர்களை புகழ்ந்த ஈமார் பிராப்பர்டீஸ் நிறுவனர்!

English Summary

Flash: The Governor who did not invite to form the government.. will immediately approach the Supreme Court..!

Next Post

ஓராண்டை நிறைவு செய்த 'ஆப்ரேஷன் சிந்தூர்' : பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா.!

Thu May 7 , 2026
பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’-இன் முதலாம் ஆண்டு நிறைவை இந்தியா இன்று அனுசரிக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதோடு, இந்திய ஆயுதப் படைகளின் வீரத்தையும் புகழ்ந்தார். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த […]
op sindoor 1778119913 1

You May Like