தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம்.. ஆதவ் அர்ஜூனா விளக்கத்திற்கு வன்னியரசு கடும் பதிலடி..!

1344203

முதல்வராக விஜய் பதவியேற்ற போதும், தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்ற போதும் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளிக்கமளித்தார்.  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.


தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! என அவர் விளக்கினார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிக சட்டசபைக் குழு தலைவர் வன்னியரசு பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய தேசிய பாடலான வந்தே மாதரம்’ பாடப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஜனவரி 28-ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 5 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும், எங்கெங்கெல்லாம் பாடப்பட வேண்டும், அப்பாடலின் வரிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை கொண்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சிகள், குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க வரும் போதும், அந்நிகழ்விலிருந்து வெளியேறும் போதும், குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் வந்தே மாதரம் இசைக்கப்படலாம் என்று அந்த அறிக்கை சொல்கிறது.

ஆனால் வந்தே மாதரம் பாடல் எங்கெல்லாம் பாடப்படலாம் என்று சொல்லப்படும் பகுதியில், அணிவகுப்பு, கொடியேற்றப்படும் நிகழ்வு, கலாச்சாரம் நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதுடன் பாடப்படலாம். ஆனால் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் மட்டுமே பாடப்படலாம் என்று குறிப்பிடும் அறிக்கை, மற்ற எந்தவித நிகழ்வுகளையும் ‘May Be’ என்று தான் குறிப்பிடுகிறது. அதாவது மற்ற நிகழ்வுகளில் பாடுவது கட்டாயமானது அல்ல.

ஒரு நிகழ்வில் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் பாடப்படுமாயின், முதலில் தேசிய பாடலான வந்தே மாதரம் தான் பாட வேண்டும் என்று மத்திய அரசின் அறிக்கையில் கடைசி பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆக, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்படியும், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படியும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதேநேரம் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட வேண்டியதும் இல்லை.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆளுநருடன் இணைந்தே தமிழ்நாடு அரசும் இந்த அநீதியை அரங்கேற்றியதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய இனத்தின் அடையாளத்தையும் இறையான்மையையும் பாதுகாப்பது தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மிக முக்கியமான கடமையாகும் என விசிகவின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Read more: Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்.. தங்கம் விலை அதிரடி சரிவு..! எவ்வளவு தெரியுமா..?

English Summary

Tamil Mother’s Day greeting insult issue.. Vanniyarasu strongly responds to Adhav Arjuna’s explanation..!

Next Post

தமிழக முதலமைச்சர் விஜய், 2-வது பணக்கார MLA..! அப்ப முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா..?

Mon May 11 , 2026
தமிழகத்தின் புதிய முதலமைச்சரான விஜய், ரூ. 648 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டுள்ளார்; கடந்த நிதியாண்டில் ரூ. 184 கோடி வருமானம் ஈட்டியதாக அறிவித்துள்ள இவர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிலேயே (MLA) இரண்டாவது மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார்.. இவர் ரூ. 426.20 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களையும், ரூ. 222.65 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துக்களையும் அறிவித்துள்ளார். வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, ​​புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடையே இவர் […]
cm vijay n

You May Like