நம்ம முதலமைச்சரா இது.. நடிகை த்ரிஷாவுடன் ஒன்றாக IPL மேட்ச் பார்த்த விஜய்..? தீயாய் பரவும் வீடியோ.. உண்மை என்ன..?

vi thrish ipl

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெறுபவராகவும் உள்ள விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பாக, சமூக வலைதளங்களில் மீண்டும் பல்வேறு ஊகங்கள் பரவி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.


கடந்த சில ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருப்பதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது பரவி வந்தாலும், அவை எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவோ அல்லது மறுக்கப்படவோ இல்லை. இதற்கிடையே நடிகர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஒரு பிரபல நடிகையுடனான விஜய்யின் உறவே விவாகரத்துக்கு காரணம் என சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஒரு திருமண விழாவில் த்ரிஷாவும் விஜய்யும் ஒன்றாகக் கலந்துகொண்டது விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக ஐபிஎல் போட்டியை நேரில் காணும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து, ரசிகர்களை பார்த்து கையசைக்கும் காட்சிகளும் இருப்பதாக அந்த வீடியோவுடன் பரவி வருகிறது.

இந்த வீடியோ வெளிவந்ததும், ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையே பெரும் ஆர்வமும், குழப்பமும் ஏற்பட்டது. சிலர் இது உண்மையான நிகழ்வு என நம்பிய நிலையில், மற்றொரு தரப்பினர் இதை சந்தேகத்துடன் அணுகினர். ஆனால், கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்த காணொளி உண்மையானது அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பது தெரியவந்தது. இருவரும் உண்மையில் ஒன்றாக ஐபிஎல் போட்டியை பார்வையிடவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

Read more: Breaking : 94.31% பேர் தேர்ச்சி..! 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்த மாவட்டம் முதலிடம்..?

English Summary

Tamil Nadu CM Thalapathy Vijay attended CSK IPL 2026 match with rumoured girlfriend Trisha Krishnan?

Next Post

Flash : ஹேப்பி நியூஸ்..! ஒரே நாளில் ரூ.15,000 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

Wed May 20 , 2026
In Chennai today, the price of ornamental gold has dropped by Rs. 960 per sovereign and is being sold at Rs. 1,18,000.
gold silver

You May Like