“திமுக, அதிமுக வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. கேவலமாக இருக்கு.. இது தவெகவுக்கு நல்லதல்ல..” கொந்தளித்த ராஜேந்திர பாலாஜி..!

vijay rajendra balaji

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..


சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் பெரும் பூகம்படம் வெடித்தது.. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏக்களீன் ஆதரவும் இருந்தது.. இதையடுத்து 29 பேரின் கட்சி பொறுப்புகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்திருந்தார்..

இதனிடையே தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு ஏமாற்றத்தையே சந்தித்தது.. அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடையாது என்று தவெக கூறிவிட்டது.. எனினும் அமைச்சர் பதவி என்று நாங்கள் கூறவில்லை, ஆதரவு மட்டுமே வழங்குவதாக கூறினோம் என்று சமாளித்துவிட்டது..

இந்த சூழலில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்..

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ ஒரு கட்சி என்றால் சலசலப்பு இருக்க தான் செய்யும்.. எஸ்.பி. வேலுமணி தரப்பு அதை தான் செய்துள்ளது.. தாயை நோக்கி வந்த பிள்ளை போல் அவர்கள் மீண்டும் எடப்பாடியாரிடம் வந்துவிட்டார்.. ஆனால் ஒரு கட்சி சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதை உதறிவிட்டு மாற்றுக் கட்சியிடம் இணைந்தது தமிழக அரசியலில் ஒரு அலங்கோலத்தை உருவாக்கும் நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது.. இதை தமிழ்நாட்டு மக்களும் பார்ப்பார்கள்.. இது தவெகவுக்கு நல்லது கிடையாது.. திமுக, அதிமுக வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. இது கேவலமாக இருக்கிறது.. தமிழ்நாட்டு அரசியலை அனைவரும் கேவலமாக தான் பார்க்கின்றனர்..

எஸ்.பி. வேலுமணி அணி எம்.எல்.ஏக்க மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடமே இணைந்து கொண்டா அவர் ஏற்றுக்கொள்வார்.. ஏற்கனவே 5 எம்.எல்.ஏக்கள் நாங்கள் செய்தது தவறு என்று மன்னிப்பு கடிதம் வழங்கியதால் அவர்களை ஏற்றுக் கொண்டார்.. அதே போல் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களையும் எடப்பாடி ஏற்றுக்கொள்வார்.. இன்று குருப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.. எனவே அதிமுகவுக்கு நல்லதே நடக்கும். அதிமுக தான் எடப்பாடியார்.. எடப்பாடியார் தான் அதிமுக என்ற நிலை வந்துவிடும்..” என்று தெரிவித்தார்..

Read More : தூயசக்தி இல்ல துயரசக்தி.. காங்கிரசின் போலி பாஜக எதிர்ப்பு பல்லிளிக்கிறது.. மு.க.ஸ்டாலின் சாடல்..!

English Summary

Former Minister Rajendra Balaji has leveled various criticisms against the TVK.

RUPA

Next Post

பெண்களின் துயர் போக்கும் பேராத்துச் செல்வி.. தாமிரபரணி கரையில் பலருக்கு தெரியாத அம்மன் கோவில்..!

Tue May 26 , 2026
The goddess who relieves women's sorrows.. An unknown Amman temple on the banks of Thamirabarani..!
Thiru Perathu Selvi Ambal Kovil 2

You May Like