“இதை ஏற்க முடியாது.. இது தவெகவின் எதிர்கால அரசியலுக்கு உகந்ததல்ல..” திருமா பரபரப்பு பேட்டி..!

Vijay and Thirumavalavan

விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோவ விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவை நாடாமால், காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவை நாடியதற்கு அதிமுக – பாஜக உறவு தான் காரணம் என்று தவெகவினர் கூறியுள்ளனர்.. இன்று அதிமுகவின் இந்த நெருக்கடி நிலையை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளதாக நான் கருதுகிறேன்..


அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை ஏற்க முடியாது.. யார் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும் அது தவெக மீதான நம்பகதன்மையை பாதிக்க செய்யும்.. தவெக தலைமை இந்த விஷயங்களை ஊக்குவிக்கக் கூடாது.. எனவே தவெக தலைமை இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்..

தமிழ்நாட்டு அரசியலில் தலித்துகள் இவ்வளவு பேருக்கு அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது இது முதன்முறை. ஆனால் கர்நாடாகவில் 7 பேர் தலித் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பது சான்றாக இருக்கிறது.. அமைச்சரவையில் தலித் சமூகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி..

தவெக அரசுக்கு விசிக, இடதுசாரிகள் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையில் செயல்பட வேண்டும்.. இந்த நம்பிக்கை இல்லாததால் தான் அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற விமர்சனங்கள் வருகின்றன.. இந்த விமர்சனங்கள் தவெகவின் எதிர்கால அரசியலுக்கு உகந்ததல்ல.. ஒரு நல்ல அறிகுறியும் அல்ல என்பதை தோழமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..” என்று தெரிவித்தார்..

குதிரை பேர அரசியலில் ஈடுபடும் தவெக..?

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபடுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. அதிமுகவில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது..

இதனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத கேவலமான குதிரை பேர அரசியலை முதல்வர் விஜய் செய்துவருதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா..! குதிரை பேரம் நடந்ததா..? பரபரப்பு பதில்..!

English Summary

Thirumavalavan has stated that it is unacceptable for AIADMK MLAs to resign from their posts and join the TVK.

RUPA

Next Post

Breaking : அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவிப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது..?

Tue May 26 , 2026
Following Trichy East, Maduranthakam, Dharapuram, and Perundurai, the Ambasamudram constituency has now also been declared vacant.
isakki subbaiya resign

You May Like