தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன.. ஆனால் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக ஆட்சியை பிடிக்கும் என்பதை இரு திராவிட கட்சிகள் மட்டுமின்றி வேறு யாருமே எதிர்பார்க்கவில்லை..
ஆனாலும் கட்சி கட்டமைப்பு, வலுவான தலைமை ஆகியவற்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக பெற்றது.. மறுபுறம் அதிமுகவோ இதுவரை இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது.. 11 தோல்விகளை கடந்தும் அதில் இருந்து பாடம் கற்காத பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பத்திற்கேற்ப ஆலோசித்து முடிவெடுக்க இறங்கி வர மறுகிறார்.
இதனால் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ் தலைமையில் தனி அணி உருவாகி உள்ளது.. இதுபோதாதென்று பல அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இனைந்து வருகின்றனர்.. தற்போதைய நிலவரப்படி ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4-ஆக உள்ளது.. எனினும் 10 முதல் 15 வரை உயரக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.
இப்படி அதிமுகவின் சட்டமன்ற பலம் குறைந்து கொண்டே போகிறது.. இதனால் திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற பிம்பம் உடைந்து, அந்த இடத்தை தவெக பிடித்துக் கொண்டதா என்ற கேள்வி எழுகிறது..
இந்த சூழலில் தமிழகத்தில் புதிய அரசியல் சக்தி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. அண்ணாமலைக்கு கட்சி மேலிடம் உரிய முக்கியத்துவம், அங்கீகாரம் கொடுக்க வில்லை என்று அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தி குரல் எழுப்பி வருகின்றனர்..
இந்த நிலையில் அண்ணாமலை போட்ட பதிவு புதிய கட்சி தொடர்பான ஊகத்திற்கு வலுசேர்த்துள்ளது.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதிவிட்டிருந்தார்.. மேலும் தனது பதிவில் “ மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும். எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
அந்த பதிவுக்கு கீழ் அவரின் ஆதரவாளர்கள் பலரும் புதிய கட்சி தொடங்குங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் விஜய் Vs அண்ணாமலை என்று அரசியல் களம் மாறும் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.. இளைஞர்கள், அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள், வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் என பலரும் அண்ணாமலைக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது..
எனவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினாலோ, தனித்து நின்று அரசியல் செய்தாலோ அரசியலில் கவனம் பெற முடியும் என்றே அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றன.. ஆனால் விஜய்யை தோற்கடிக்கும் வளவுக்கு அண்ணாமலையின் கட்சி பெரிய சக்தியாக மாறும் வாய்ப்புகள் குறைவுதான்.. ஆனாலும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விஜய்யை எதிர்த்து களமாடலாம்..
இவை எல்லாமே வெறும் யூகங்கள் தான் என்றாலும், இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது.. திமுக தரப்பில் உதயநிதி முக்கிய தலைவராக உருவெடுத்து வருகிறார்.. ஏற்கனவே விஜய் Vs உதயநிதி என்று தமிழக அரசியல் களம் மாறி உள்ள நிலையில், தற்போது அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் பட்சத்தில், அவரும் இந்த போட்டியில் இணைவார்.. தமிழக அரசியல் மும்முனை போட்டிக்கு நகருமா அல்லது இருமுனை களத்தில் பயணிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Read More : “இதை ஏற்க முடியாது.. இது தவெகவின் எதிர்கால அரசியலுக்கு உகந்ததல்ல..” திருமா பரபரப்பு பேட்டி..!



