தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் முதல்வர் விஜய் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றார்.. இன்று மதியம் சென்னையில் இருந்து மதியம் தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய் மதியம் 3 மணியளவில் திருச்சி விமான நிலையம் சென்றார்.. திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ரமேஷ் உள்ளிட்டோரும், எம்.பி. துரை வைகோ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..
மேலும் காவல்துறை சார்பில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.. விமான நிலையத்தில் சாலை மார்க்கமாக தனது பிரச்சார வாகனத்தில் சென்ற விஜய்க்கு பொதுமக்கள், தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. முதல்வர் விஜய்யும் தொண்டர்கள், மக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே சென்றார்..
திருச்சி புனித வளனார் கல்லூரி வளாகத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய்யை பார்த்ததும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.. இதை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வாக்காளார்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வணக்கும் நன்றிகளும்.. திருச்சி கிழக்கு மக்கள் அனைவருக்கும் எனது ஸ்பெஷல் வணக்கமும் ஸ்பெஷல் நன்றிகளும்.. ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை.. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை.. கல்யாண வீட்டில் போய் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்..
இத்தனை ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஏமாற்றி கொண்டிருந்த இந்த 2 பேரையும் வேண்டும் என்று ஒதுக்கிவிட்டு, உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்க விஜய்யை முதலமைச்சராக இல்லை.. இல்லை.. முதல் சேவகனாக ஆக்கியிருக்கீங்க.. அதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தலைவணங்கி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. எங்களுக்கு ஆதரவளித்த அத்தனை இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
1977-ல் நீங்க போடாத ஓட்டை 2026 தேர்தலில் போட்டிருக்கிறீர்கள்.. என்ன, இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. எதிர்காலத்தில் நடக்கும் எல்லா தேர்தல்களிலேயும் உங்களின் முழு ஆதரவையும் வாங்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது ஆழமாக பதிந்துள்ளது..” என்று தெரிவித்தார்..



