“எல்லாத்தையும் நீங்க செய்துவிட்டு என் மீது பழி போடுறீங்க..” சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து முதல்வர் விஜய் காட்டம்..!

cm vijay n 3

திருச்சியில் தவெக சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ உங்க விஜய்யின் ஆட்சி அமையக் கூடாது என்னென்ன கூத்து நடத்தினார்கள் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.. இப்போதும் நமது மக்களை தற்குறி என்று கூறுகிறார்கள்.. நீங்கள் தற்குறி என்று சொன்னவர்கள் தான் இன்று உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.. அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி மக்கள் நமக்கு ஓட்டுப்போட்டுள்ளார்களாம்..


மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டால் அவர்கள் நல்லவர்களாம்.. நமக்கு ஓட்டுப் போட்டால் அவர்கள் தற்குறிகளாம்.. திமுக இப்படி ஆனதற்கு காரணம் உழைக்காமல் உங்கள் குடும்பத்திற்குள் போய் கேளுங்கள் என்று சொல்கிறார்கள்.. இது புரியாமல் நம்மையும், நம்ம மக்களையும் தப்பா பேசிக்கிட்டு இருக்காங்க.. மக்களை தப்பாக பேசினால் இந்த விஜய் சும்மா இருக்க மாட்டான்.. மக்களின் உண்மையான பிரதிநிதி இந்த மக்கள் தான்.. இன்றைக்கும் என்றைக்கும் இந்த விஜய் மட்டும் தான்.. இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு அரசியலுக்கு வரவில்லை.. உங்கள் கூட நிற்க தான் அரசியலுக்கு வந்துள்ளேன்..

தமிழகத்தில் ஒரு ஊர் விடாமல் போதை பொருள் கலாச்சாம் பரவி உள்ளது.. ஆரம்பத்திலேயே இதை சரி செய்த்ருந்தால் இந்த பெண் குழந்தைகள், பெண்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்குமா..? எல்லாவற்றையும் நீங்கள் செய்து விட்டு, என் மீது பழி போடுறீங்க..? எத்தனை பழி போட்டாலும் மக்களை காக்கும் பணியை இந்த விஜய் செய்வான்.. பெண் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் காவல்படை அடுத்த வாரம் தொடங்கப் போகிறோம்.. என்ன பழி நம் மீது போட்டாலும், உண்மையாக உறுதியாக மக்களுக்கு செய்ய வேண்டியதை விஜய் செய்து காட்டுவான்..

மக்களுக்காக இவ்வளவு வேலை பார்க்கும் போது நாம் குதிரை பேரம் செய்வதாக பொய் சொல்கின்றனர்.. திமுகவும் தீஞ்சு போன சக்தியும் தவெக ஆட்சி அமைய விடாமல் தடுக்க பார்த்தனர்.. நாம் ஆட்சிக்கு வந்தால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாது.. தவெக ஆட்சி எந்த பாகுபாடும் இல்லாத ஆட்சியாக தான் இருக்கும்.. மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவ நீதியை விட்டுக்கொடுக்க மாட்டோம்.. மாநில உரிமை, என எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.. வரப்போகும் இடைத் தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்த மாதிரி நமது வேட்பாளரையு ஜெயிக்க வைக்க வேண்டும்.. என்னை ஜெயிக்க வைத்த தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

“நான் கருப்பு கலர் கோட் சூட் போட இதுதான் காரணம்..” விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்.!

Mon Jun 1 , 2026
நீங்கள் அமைத்துக் கொடுத்துள்ள இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.. யார் எந்த நிலைமைக்கு போனாலும் இந்த கிண்டலும், கேலியுமாக பேசுவது இருக்க தானே செய்யும்.. நம்மை பற்றி, நமது அரசியல் பற்றி, நமது பேச்சு பற்றி கிண்டல், கேலியாக பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.. தயவு செய்து இதை நிறுத்திவிடாதீர்கள்.. தயவு செய்து தொடர்ந்து கிண்டல் செய்யுங்கள்.. நீங்கள் தான் எனது எனர்ஜி ஃபோர்ஸ்.. நீங்கள் பேசிக்கிட்டே […]
cm vijay new

You May Like