“சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர்..” கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் ராகுல்காந்தி புகழாரம்..!

rahul gandhi karunanidhi

திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருடன் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்..


கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.. இந்த நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் புகழஞ்சலி சூட்டிஉள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கலைஞர்’ மு. கருணாநிதி அவர்கள், தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.

அவர் ஒரு முதலமைச்சர் மட்டுமல்ல – ஒரு எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் ஒரு அரசியலமைப்பில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலி..” என்று குறிப்பிட்டுள்ளார்..

திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவு :

2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. முதன்முறையாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிம் தவெக ஆதரவு கோரிய நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமண்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதன் மூலம் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்தது.

திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.. மேலும் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டது.. இதை தொடர்ந்து ஒட்டுண்ணியாக இருந்து அடுத்த தயவில் வெற்றி பெற்றுவிட்டு முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்..! கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..!

RUPA

Next Post

சூப்பர் எல் நினோவால் உலகிற்கு ஏற்படப் போகும் பேரழிவு.. இந்தியாவுக்கு அதிக ஆபத்தா..?

Wed Jun 3 , 2026
வரும் வாரங்களில் உலகின் காலநிலையை தீவிரமாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு “சூப்பர் எல் நினோ” (Super El Niño) உருவாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. புவி வெப்பமடைதலால் ஏற்கனவே வெப்பமடைந்துள்ள இந்தப் பூமியின் மீது, இந்த எல் நினோவின் தாக்கம் இன்னும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த முறை உருவாகும் சூப்பர் எல் நினோ, கடந்த […]
el nino 1 1

You May Like