கர்நாடக மாநிலத்தில் பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டாகி பலி.
தற்போதைய காலகட்டத்தில், மனிதனுக்கு மரணம் எப்போது, எப்படி வரும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நோய்களின் காரணமாக பலர் கூட்டம் கூட்டமாக உயிரிழக்கின்றனர். அதேபோல், விபத்துகள் மற்றும் அலட்சியங்களால் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பல நேரங்களில், சில நொடிகளின் கவனக்குறைவினாலேயே உயிரிழப்புகள் நிகழ்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், ஒரு இளைஞரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் நாம் மேலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.கர்நாடக மாநிலத்தில் பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டாகி பலியானார்.
கர்நாடக மாநிலம் நவலகுந்துவைச் சேர்ந்தவர் 17 வயதான பக்கிரேஷ். ஐ.டி.ஐ. மாணவரான இவர், உப்பள்ளியில் இருந்து லட்சுமேஷ்வர் நோக்கி அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் பஸ் சென்றபோது, ஜன்னல் வழியாக அந்த மாணவர் எச்சில் துப்பத் தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, பஸ்சை கடக்கும் போது அந்த மாணவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: எச்சரிக்கை!!! பெற்றோரின் அலட்சியத்தால் துடிதுடித்து பலியான 5 வயது குழந்தை..



