சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பொதுக் குளியலறையில், பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள பெண்களுக்கான பொதுக் குளியலறையை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, வெளியே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இதை கவனித்த சுஜாதா உடனே கத்தி கூச்சலிட்டுளார்.
இதையடுத்து, அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பயணிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து வந்து, தப்பிச் செல்ல முயன்ற அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் 27 வயதான அருண்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அருண்ராஜ் மீது பெண்களின் தனியுரிமையை மீறியதாகவும், தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை எபடுதி உள்ளது.
Also Read: “உன்னால ஒழுங்கா சாப்பாடு கூட செய்ய முடியாதா?”… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரச் செயல்!



