உணவில் பல்லி..!! துடிதுடித்த தூய்மைப் பணியாளர்கள்..!! 100 பேர் ஹாஸ்பிட்டலில் அட்மிட்..!!

Aavadi 2026

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, வழக்கம்போல் பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா பகுதியில் ஆவடி மாநகராட்சி சார்பில் இன்று சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது, பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு, உணவருந்தி கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


அதற்குள்ளாகவே, அந்த உணவை உணவகம் மற்றும் விநியோக இடத்திலேயே பல ஊழியர்கள் உட்கொண்டிருந்ததால், உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான முதலுதவி மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரின் உடல்நிலையும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளும் ஆவடி காவல்துறையினரும் இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். உணவு தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகளில் முறையான பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டதா அல்லது அலட்சியமாக செயல்பட்டார்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Read More : தமிழகத்தில் 2031ம் ஆண்டு பாமக ஆட்சி தான் நடக்கும்..!! அன்புமணி ராமதாஸ் சூளுரை..!!

You May Like