“அம்மா… வலிக்குது மா!” 3 வயது பிஞ்சின் உயிரை பறித்த தாயின் 2- வது கணவர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

8c62d2ef 3011 4fb2 a9b1 c3a820dd3a28 1

கள்ளக்காதல் மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் முறிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி குழந்தைகள்தான். சிலர் கணநேர இன்பத்திற்காக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் கூட புறக்கணித்து விடுகின்றனர். பெற்றோரின் தவறான முடிவுகள் பல நேரங்களில் குழந்தைகளின் வாழ்க்கையையே சீரழிப்பதுடன், சில சம்பவங்களில் உயிரிழப்புக்கும் காரணமாகின்றன. சிவகாசி அருகே 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், இதுபோன்ற உறவுகளின் மோசமான விளைவுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், சிறுமியின் தாயுடன் வசித்து வந்த விக்னேஷ்வரன் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர் அருகே வைகோ நகரை சேர்ந்த சுவாதி (22), துரைப்பாண்டி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு விஷ்ணுபிரியா என்ற 3 வயது மகள் இருந்தார்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சுவாதி தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில், வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் வேலைக்கு சென்றபோது, அங்கு பணியாற்றிய சிவகாசி பேராபட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் (27) என்பவருடன் சுவாதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு, திருத்தங்கல் பசும்பொன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த விக்னேஷ்வரன், சுவாதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த தகராறின் போது, சுவாதியையும், 3 வயது சிறுமி விஷ்ணுபிரியாவையும் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த விஷ்ணுபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சுவாதிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் கிடைத்ததும் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்னேஷ்வரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: உஷார்! குளிர்பானத்தை குடித்த உடன் மயங்கிய இளம்பெண்… ஆபாச வீடியோ எடுத்து இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்..

Saranya

Next Post

பெற்றோர்களே கவனம்! வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி, 15 வயது சிறுமிக்கு 60 வயது முதியவர் செய்த காரியம்!

Mon Aug 3 , 2026
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, முன்பின் தெரியாத நபர்களை மட்டுமல்ல, எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை எளிதில் நம்பி அவர்களுடன் செல்லக் கூடாது என்பதை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்றாலும் கூட, பெற்றோரின் அனுமதி இல்லாமல் யாருடனும் செல்லக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இதுபோன்ற பாதுகாப்பு விழிப்புணர்வு பல குற்றங்களை தடுக்க உதவும். 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம், பெற்றோர்களுக்கு முக்கிய […]
WhatsApp Image 2026 08 03 at 12.16.57 PM

You May Like