நீட் ரத்து தீர்மானத்தை ஏற்கவில்லை..! பாஜக எம்.எல்.ஏ. வெளிநடப்பு..!

bojarajan

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார்.


நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் சிறந்த பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லை என்று தெரிவித்த அவர், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Also Read:சென்னையில் இலவச WiFi..! 44 இடங்களில் வசதி தொடக்கம்.. முழு லிஸ்ட் இதோ..!

Newsnation_Admin

Next Post

வீடு புகுந்து தாய், மகளை வெட்டி சாய்த்த காதலன்..! பல்லடத்தில் கொடூரம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Tue Aug 11 , 2026
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். இவர்களது மகள் பூவரசி, வயது 21, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை பழனிசாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். […]
Thirupur 2026

You May Like