குட் நியூஸ்..!! 9,000 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு..!!

Karnataka Kabini 2026

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டிருந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்குச் சாதகமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கடந்த மாதம் 30-ஆம் தேதி வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டும் கர்நாடக அரசு அதனைச் செயல்படுத்தாததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழகம் தனது வாதங்களை வலுவாக முன்வைத்தது.

டெல்லியில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பு வாதங்களும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆணையம், அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு நாள்தோறும் வினாடிக்கு 9,000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களில் சுமார் 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Read More : முன்னாள் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்டு 5 நாட்களாக பலாத்காரம்..!! பதுங்கு அறையில் வைத்து அரங்கேறிய கொடூரம்..!!

Next Post

17 வயதான பேத்தியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர்..!! குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சி..!!

Tue Aug 25 , 2026
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (41). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பேத்தி முறையில் உள்ள இவரது உறவினரான 17 வயது சிறுமி தனியார் கல்லுாரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் தனியாக இருந்த மாணவியை கோவிந்தராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி கர்ப்பமானார். கடந்த 21ஆம் தேதி இரவு மாணவிக்கு கடுமையான வயிற்று வலி […]
Krishnagiri 2026

You May Like