தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் ஆபாசமாகவும் பேசியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் தேசிய மகளிர் ஆணையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரை ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணையம், உதயநிதி பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை கருத்துக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு உத்தரவிட்டு பரிந்துரை செய்துள்ளது.
Read More : பினாமி பெயரில் குவாரிகள்..!! அமைச்சர் ஆதவ் சொன்ன அந்த வார்த்தை..!! கொந்தளித்த திமுக MLA-க்கள்..!!



