உதயநிதி மீது பாய்கிறது நடவடிக்கை..!! தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் திமுக தலைவர்கள்..!!

Udhayanidhi 2026 1

தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்ட கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


கடந்த 3-ஆம் தேதி திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் ஆபாசமாகவும் பேசியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் தேசிய மகளிர் ஆணையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரை ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணையம், உதயநிதி பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை கருத்துக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு உத்தரவிட்டு பரிந்துரை செய்துள்ளது.

Read More : பினாமி பெயரில் குவாரிகள்..!! அமைச்சர் ஆதவ் சொன்ன அந்த வார்த்தை..!! கொந்தளித்த திமுக MLA-க்கள்..!!

Next Post

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சளி மருந்துகள் கொடுக்க தடை!. அரசின் புதிய அதிரடி உத்தரவு!

Wed Aug 26 , 2026
குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி மருந்துகள் குறித்து பெற்றோரிடையே உள்ள முக்கிய கவலையைத் தீர்க்கும் வகையில், இந்தியாவில் புதிய மருந்து பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், குளோர்பெனிரமைன் மாலெட்டும் (chlorpheniramine maleate) பெனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடும் (phenylephrine hydrochloride) கலந்த கலவை மருந்துகளை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த மருந்துக் கலவையை இந்த வயதுப் பிரிவினருக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற […]
hospital syrup worms

You May Like