ஆட்டோவில் போறீங்களா? முதல் 1.8 கி.மீ.க்கு ₹50.. தமிழக அரசின் புதிய கட்டணம்!

bengaluru auto driver 1

தமிழகத்தில் ஆட்டோவில் பயணம் செய்வோரின் பாக்கெட்டில் இனி கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்டகாலக் கோரிக்கையைத் தொடர்ந்து, பயணக் கட்டணத்தை உயர்த்தி அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சப் பயணத்துக்கான கட்டணம் ₹50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


புதிய கட்டண முறையில், முதல் 1.8 கிலோமீட்டர் பயணத்துக்கு ₹50 செலுத்த வேண்டும். அதற்கு மேல் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ₹25 வசூலிக்கப்படும். இதற்கு முன்பு முதல் 1.8 கி.மீ.க்கு ₹25, கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹12 கட்டணமாக இருந்தது.

இரவு நேரத்தில் ஆட்டோவில் செல்வோருக்குக் கட்டணம் மேலும் அதிகரிக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தின் ஒன்றரை மடங்கு வசூலிக்கப்படும். அதேபோல், ஆட்டோ காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ₹1 கட்டணம் செலுத்த வேண்டும்.

மலைப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தனி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு முதல் 1.8 கிலோமீட்டருக்கு ₹60 செலுத்த வேண்டும்; அதற்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ₹30 கட்டணம் வசூலிக்கப்படும்.

பெட்ரோல் விலை, வாகனப் பராமரிப்புச் செலவு, காப்பீடு மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றால் வருமானம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தெரிவித்து வந்தன. மேலும், மெட்ரோ ரயில், மினி பேருந்துகள், பைக் டாக்ஸி உள்ளிட்ட மாற்றுப் போக்குவரத்து வசதிகளின் விரிவாக்கமும் தங்களுக்குப் போட்டியாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தச் சூழலில், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஓட்டுநர் சங்கங்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அரசு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. இதனால் ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்வோர், குறிப்பாக நீண்ட தூரம் செல்பவர்கள், இனி தங்களது பயணச் செலவைக் கணக்கிட்டுத் திட்டமிட வேண்டியிருக்கும்.

Also Read: “குழந்தைங்க வேண்டாம்.. கள்ளக்காதல் தான் முக்கியம்!” 3 குழந்தைகளுக்குத் தந்தை, 5 குழந்தைகளுக்குத் தாய் செய்த காரியம்!

Saranya

Next Post

சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் இனி இது தான் தண்டனை! 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்..

Wed Oct 28 , 2026
தமிழகச் சிறைகளில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களைத் தடுக்க, பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இனி சிறைகளின் கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேனி மற்றும் புழல் சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்கள் இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. மொத்தம் 17 […]
95a3fe9f91c50762b58e0eafb885225cf7c64a0ab55877b6276fff8ed187cb65

You May Like