fbpx

கள்ளச்சாராயம், சட்டப்பேரவை சஸ்பெண்ட்..!! அதிமுக எம்.எல்.ஏக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது..!!

கள்ளக்குறிச்சி நிகழ்வு மற்றும் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இப்படியான நிலையில், மானியக் கோரிக்கை விவாதம் தொடர்பாக சட்டபேரவை ஜூன் 20ஆம் தேதி கூடியது. அன்று முதல் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கருப்புச்சட்டை அணிந்து அவை நிகழ்வுகளில் பங்கேற்று வந்தனர். மேலும், கேள்வி நேரத்தில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை காவலர்களால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், தினமும் அமளியில் ஈடுபட்டு வந்ததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அமைதியான முறையில் உண்ணாவிரதம், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமை, அரசு அதிகாரிகள், தனிப்பட்ட நபர்களை தாக்கி பேசுதல், முழக்கமிடுதல் கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Read More : Kalki 2898 AD படம் எப்படி இருக்கு..? கேமியோ ரோலில் பிரபாஸ்..!! அமிதாப் பச்சன் மாஸ்..!! அது சுத்தமா செட் ஆகல..!! ரசிகர்கள் கருத்து..!!

English Summary

AIADMK MLAs have started a hunger strike today to protest the Kallakurichi incident and the suspension of AIADMK MLAs in the Legislative Assembly.

Chella

Next Post

அதர்மத்தை அழிக்க கல்கி அவதாரம் எடுக்கும் விஷ்ணு!. முடிவுக்கு வரும் கலியுகம்!. பூமியில் எப்போது, எங்கு பிறப்பார்?

Thu Jun 27 , 2024
The Rise of Kalki Avatar: What You Need to Know About the Final Avatar of Lord Vishnu

You May Like