கொடூர கொலைகளை செய்யும் கல் நெஞ்சம் கொண்ட கொடூர சைக்கோ பல, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஒருவரால் அதிகம் பாதிக்கப்பட்டு சித்ரவதைகளை அனுபவித்து, விரக்தியின் உச்சத்திலும் சிலர் கொடூர கொலைகளை செய்வது உண்டு. அந்த வகையில் தற்போது நடந்துள்ள கொடூர கொலை ஒன்று குலை நடுங்க வைத்துள்ளது.
ஆம், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜெய்கான் நகரில் நேற்று முன்தினம் கொடூரமாக கொல்லப்பட்ட ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதாவது, அவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டதோடு, அந்த ஆணுறுப்பை அவருடைய வாயில் திணித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், அவரது பெயர் சந்தாபீர் லாமா என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சந்தாபீர் லாமாவின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் 7 பேர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போலீசார் சந்தேகத்திற்கு உரிய 7 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: 7 மாத கர்ப்பிணியை, 25 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த மாமியார்…