தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி..!! எந்த கட்சியும் அசைக்க முடியாதாம்..!! உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள்..!!

election44410 1643283557

தமிழக அரசியல் களத்தில் ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கமால் பாஷா புதிய கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ கொடியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.


நிகழ்வில் பேசிய கட்சியின் தலைவர் கமால் பாஷா, “த.மு.மு.க. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடன், பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து தற்போது ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ எனும் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். கட்சியை வலுப்படுத்தும் வகையில் மொத்தம் 22 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.

மேலும், “எதிர்வரும் காலங்களில் மக்கள் ஒற்றுமை கழகத்தின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத அளவிற்கான அரசியல் பலத்தை பெறுவோம். இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கிப் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Read More : நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,280 சரிவு..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Next Post

பெற்ற தாய்க்கு செ*ஸ் டார்ச்சர்..! போதையில் அத்துமீறிய மகனுக்கு பாடம்..! 3 மாதங்களில் கழித்து வெளிவந்த உண்மை..!

Thu Aug 27 , 2026
மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். […]
Madurai 2026

You May Like