தமிழ்நாட்டின் புதிய முதல்வராக கடந்த 10-ம் தேதி பதவியேற்றார்.. முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே 200 யூனிட் மின்சார இலவசம் திட்டத்திற்கான கோப்பில் விஜய் கையெழுத்திட்டார்.. இந்த புதிய திட்டத்தின் கீழ் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வெளியிடப்பட்டது.. இந்த நடைமுறை கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது..
அந்த வகையில் கடந்த காலங்களில் 210 யூனிட்டுக்கு 282 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 210 யூனிட்டுக்கு 47 ரூபாய் தான் வசூலிக்கப்பட உள்ளது.. அதே போல் 300 யூனிட்டுக்கு ரூ.705 வசூலிக்கப்பட்ட நிலையில், இனி ரூ.470 வசூலிக்கப்பட உள்ளது.. 400 யூனிட்டுக்கு ரூ.1175 வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 940 ரூபாயும், 500 யூனிட்டுக்கு ரூ.1805 வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 1570 ரூபாய் தான் வசூலிக்கப்பட உள்ளது..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோருக்கான புதிய மின் கட்டண சலுகை நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. இரு மாதங்களுக்கு 200 யூனிட் வர இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்தை அடிமட்ட அளவில் குளறுபடிகள் இன்றி செயல்படுத்துவதற்காக மின்சார வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது..
புதிய மானிய விதிகளை கணக்கிடும் வகையில் Billing Software-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.. இந்த புதிய சாப்ட்வேர் அட்பேட் மூலம் இனி வரும் காலங்களில் நுகர்வோருக்கான மின் கட்டணம் தானியங்கி முறையில் கணக்கிடப்படும்..
சாப்ட்வேரில் செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து தங்களின் கீழ் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு மாவட்ட பொறியாளர்கள் விளக்கங்களை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
நுகர்வோர் 2 மாதங்களுக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த மின்சார அளவை பொறுத்தே இந்த சலுகை மாறுபடும்.. 2 மாத கால இடைவெளியில் 500 யூனிட்டுகளுக்கு மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சார சலுகை கிடிஅக்கும்.. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின்சார பயன்பாட்டு செலவு கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
எனினும் 2 மாத கால பயன்பாட்டில் 500 யூனிட்களை தாண்டி மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இந்த புதிய 200 யூனிட் இலவச சலுகை பொருந்தாது.. 500 யூனிட்களுக்கு மேல் மின் நுகர்வு செல்லும் பட்சத்தில் அவர்களுக்கு பழைய நடைமுறையான 100 யூனிட் இலவச மின்சார திட்டம் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும்.. இந்த புதிய விதிகளை கணக்கெடுப்பு பணியாளர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும், எந்தவொரு தொழில்நுட்ப கோளாறும் இன்றி இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது..
Read More : 9, 10 ஆம் வகுப்புகளுக்கு மும்மொழி கொள்கை கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்.. CBSE அறிவிப்பு..!



