வளர்ப்பு பிராணிகளை தவிர.. உங்கள் வீட்டிற்குள் எந்த உயிரினம் வந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்? ஆன்மிக சாஸ்திரம் சொல்வது என்ன?

Home 2026 1 e1787839712367

நம் முன்னோர்களின் ஆன்மீக சாஸ்திரங்கள் மற்றும் வாஸ்து நம்பிக்கைகளின்படி, சில குறிப்பிட்ட பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகள் தானாகவே நமது வீட்டிற்குள் வருவது சுப சகுனங்களாகவும், வரவிருக்கும் நன்மைகளின் அடையாளங்களாகவும் பார்க்கப்படுகின்றன. வளர்ப்பு பிராணிகள் அல்லாமல், இயல்பாகவே இந்த உயிரினங்கள் வீட்டிற்குள் நுழைவதால் ஏற்படும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.


அந்த வகையில், வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தால் சுப காரியங்கள் கைகூடும் என்றும், வெட்டுக்கிளி வந்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. நாய் வீட்டிற்குள் வந்தால் கண் திருஷ்டி விலகும்; அரணை நுழைந்தால் நீண்ட நாட்களாக வசூலாகாத கடன் வசூலாகும்; பல்லி தென்பட்டால் குலதெய்வ அருள் நிறையும். செங்குளவி வந்தால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்; அதுவே வீடு கட்டி வாழ்ந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அணில் வந்தால் குடும்பச் சிக்கல்கள் தீரும், புறா வந்தால் பணப் பஞ்சம் நீங்கும், தட்டான் பூச்சிகள் வந்தால் நேர்மறை ஆற்றல் பெருகும்.

கிளி வந்தால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்; பொன்வண்டு வந்தால் காரிய வெற்றி உண்டாகும்; சேவல் வருகை தந்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பட்டாம்பூச்சி அல்லது காகம் வீட்டிற்கு வருவது மறைந்த முன்னோர்களின் வருகையையும், ஆசியையும் குறிப்பதாக கருதப்படும். ஆந்தையின் வருகை லட்சுமி தேவியின் அருளையும், பசுமாடு வருவது தெய்வீக அருளையும் கொண்டு சேர்க்கும். பறவை இனங்கள் வீட்டில் கூடுகட்டினால் மன அமைதி நிலவும் என்றும், மயில் அல்லது கழுகு வீட்டிற்கு வருவது மிக அரிதான நிகழ்வு என்பதால் அவ்வாறு வந்தால் அபரிமிதமான அதிர்ஷ்டம் தேடி வரும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Read More : நேபாளத்தை மீண்டும் நெருங்கி வரும் பேரழிவு..!! இன்னும் 3 நாட்களில் உடையும் ஏரி..!! சீனா பகிரங்க எச்சரிக்கை..!!

Next Post

உடல் எடையை குறைக்க சாப்பிடாம பட்டினியா இருக்கீங்களா..? டைம் வேஸ்ட் பண்ணாதீங்க..! எளிய ஃபிட்னஸ் ரகசியம்..!

Fri Aug 28 , 2026
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றவுடன் பலரும் செய்யும் முதல் தவறு உணவைத் தவிர்ப்பது அல்லது பட்டினி கிடப்பதுதான். ஆனால், உடலுக்குத் தேவையான உணவை உட்கொள்ளாமல் பட்டினி கிடப்பதால் உடல் எடை குறைவதற்குப் பதிலாக, தசை இழப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதீத சோர்வு மட்டுமே ஏற்படும். பசியை அடக்காமல் ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழிதான் ‘கலோரி மேனேஜ்மென்ட்’ (Calorie Management). அதாவது, நாம் அன்றாடம் சாப்பிடும் […]
weight gain foods

You May Like