13 வயதிலேயே தனது பெற்றோருக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. அப்போது வாடகை வீட்டில் வசித்து வந்த தனது குடும்பத்திற்காக, எதிர்காலத்தில் சம்பாதிக்கும் பணத்தில் வீடு வாங்குவதை இலக்காக வைத்திருந்த அவர், அதற்காக ஒரு வித்தியாசமான முறையையும் பின்பற்றியுள்ளார். வெற்றுத் தொகையுடன் ஒரு காசோலையை எழுதி, அந்தக் கனவை தினமும் மனதில் காட்சிப்படுத்தி வந்துள்ளார். பாட்காஸ்டர் ராஜ் […]
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டு அழகு கிரீம்கள் தொடர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. CDSCO வெளியிட்ட எச்சரிக்கையில் Chandni Whitening Cream மற்றும் Goree Beauty Cream ஆகிய இரண்டு கிரீம்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக […]
திண்டுக்கல்லில் பிரிந்து வாழ்ந்த மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் தகவல்களை வைத்து நடத்திய விசாரணையில் கணவர் சிக்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். நிலக்கோட்டையில் சர்வேயராக பணியாற்றி வரும் இவருக்கும், மனைவி காளீஸ்வரிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். காளீஸ்வரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற BRICS உச்சி மாநாடு மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் வகையில் அமெரிக்காவில் புதிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்குவதைத் […]
கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச அளவில் நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலரை கடந்துள்ள நிலையில், பணவீக்கம் மீண்டும் வேகமெடுக்குமா என்ற கவலை உருவாகியுள்ளது. இதன் தாக்கம் பொதுமக்களின் கடன் சுமையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளின் கடன் […]
வெறும் ஷாம்பு போட்டு கண்டிஷனர் பயன்படுத்துவது மட்டுமே முடி பராமரிப்பு அல்ல. குறிப்பாக வறண்டு, கரடுமுரடாக அல்லது பொலிவிழந்து காணப்படும் கூந்தலுக்கு கூடுதல் ஈரப்பதமும் ஆழமான பராமரிப்பும் தேவை. இதற்காக அடிக்கடி சலூனுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. சில அடிப்படை பொருட்களை வைத்தே வீட்டிலேயே எளிமையான ஹேர் ஸ்பா செய்து கொள்ளலாம். ஹேர் ஸ்பா என்பது முடியை சுத்தப்படுத்துவது, கண்டிஷனிங் செய்வது, மென்மையான மசாஜ் மற்றும் வெதுவெதுப்பான நீராவி அல்லது […]
தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியமானது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கவும், பல்வேறு உடல் செயல்பாடுகள் சீராக நடைபெறவும் உதவுகிறது. ஆனால், தேவையான அளவு தண்ணீர் குடித்த பிறகும் தொடர்ந்து தாகம் எடுத்துக்கொண்டே இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. போதுமான அளவு தண்ணீர் குடித்தும் அடிக்கடி தாகம் ஏற்படுவது சில நேரங்களில் உடலில் வேறு ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, தண்ணீர் […]
ஒரு நட்பு தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், அது பொதுவெளியில் பேசப்படும் அளவுக்கு சென்றுவிட்டால் அதற்கான பொறுப்பும் அதிகரிக்கிறது. குறிப்பாக சினிமாவையும் தாண்டி மக்கள் கவனிக்கும் இடத்தில் இருப்பவர்கள் தங்களது உறவுகளை கையாள்வதில் கூடுதல் கவனம் தேவை. இதையே நடிகை அம்பிகா, விஜய் – த்ரிஷா நட்பு தொடர்பான கேள்விக்கு பதிலாக சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு அரசியல் மற்றும் சினிமா விவகாரங்கள் குறித்து பேசிய அம்பிகாவிடம், விஜய் மற்றும் […]
PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, Claim எங்கே வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. உறுப்பினர்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வகையில் EPFO, WhatsApp-ஐ மையமாகக் கொண்டு புதிய டிஜிட்டல் சேவைகளை கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் சேமநல நிதி அமைப்பான EPFO, தற்போது அதிகாரப்பூர்வ WhatsApp Channel-ஐ தொடங்கியுள்ளது. EPFO தொடர்பான முக்கிய அறிவிப்புகள், சேவை சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை உறுப்பினர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த […]
UPI மூலம் பணம் செலுத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கும், RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. 2007-ம் ஆண்டு Payment and Settlement Systems Act-ன் 10A பிரிவின் […]

